பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.50, டீசல் 45 காசு உயர்வு- நள்ளிரவு முதல் அமல்!!
Subscribe to Oneindia Tamil

பெட்ரோல் விலை தொடர்பான முடிவை 2010-ம் ஆண்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்த பிறகு அவ்வப்போது விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னர் 19வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. 8 முறை லேசாக விலை குறைப்பு செய்திருக்கிறது.
கடந்த மாதம் ஜனவரி 17-ந் தேதிதான் கடைசியாக பெட்ரோல் விலையில் மாற்றம் செய்தது. 29 பைசாவை பெட்ரோல் விலையில் குறைத்து டீசல் விலையில் 50 காசுகள் உயர்த்தப்பட்டன.
தற்போது மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.50ம் டீசல் லிட்டருக்கு 45 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications