எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியைக் கடந்து வந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் நேற்று பிற்பகல் முதல் காணவில்லை என்றும் அவர் எல்லை தாண்டியிருக்கலாம் என்பதால் அவரை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரியிருந்தது.

இந்த நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நவ்சேரா என்ற இடத்தில் எல்லையைக் கடந்து வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர், படையினர் மீது தாக்குதல் நடத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ராணுவம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications