தாமிரபரணியில் மணல் கடத்தினால் குண்டாஸ்தான் - கலெக்டர் எச்சரிக்கை
தூத்துக்குடி: தாமிரபரணியில் மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், கருங்குளம், முத்தலாங்குறிச்சி, ஆழிக்குடி, பக்கப்பட்டி, முறப்பநாடு, சென்னல்பட்டி, கலியாயூர், கலாங்கரை, அகரம், அனந்தநம்பி குறிச்சி, மணக்கரை உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை அதிகம் நடக்கிறது. மணல் திருடும் வாகனங்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாமல் போக அதிகாரிகள் பள்ளம் தோண்டினர். அதையும் தாண்டி மணல் கொள்ளை நடக்கிறது.
15 நாட்களுக்கு முன் மணல் கடத்தலை தடுக்க முயன்ற ஸ்ரீவைகுண்டம் முன்னாள் தாசில்தார் மாடசாமியை கொள்ளையர்கள் லாரியால் ஏற்றி கொல்ல முயன்றனர். அதே போல் முத்தலாங்குறிச்சி தலையாரி பாலகிருஷ்ணனையும் கொல்ல முயற்சி நடந்தது.
மூறப்பநாடு, செய்துங்கநல்லூர், காவல் நிலையங்களில் மணல் திருடிய ஏராளமான பைக், உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கலெக்டர் ஆசிஷ்குமார் அகரம் தாமிரபரணி ஆற்றில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை தவிர வேறு எதற்கும் இங்கிருநது மணல் எடுக்க கூடாது. மீறி மணல் எடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும். இதுவரை மணல் திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்டிஓ லதாவுக்கும் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications