அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு

Subscribe to Oneindia Tamil

Kushboo
சென்னை: தன்னைப் பற்றி மோசமாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு நடிகை குஷ்பு டுவிட்டரில் பதில் கூறி வருகிறார். சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் பதிவிட்ட கருத்தில் "அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை. புயலுக்கு முன் வரும் அமைதி இது அவதூறு எழுதும் ரிப்போர்டர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள் என்று கூறியுள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது பற்றி குஷ்புவின் பேட்டி சமீபத்தில் விகடனில் பிரசுரமானது. இதன் தொடர்ச்சியாக குஷ்புவின் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலும் பரபரப்பு செய்தியாக இருந்தது. இந்த விவகாரத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, குஷ்புவின் பக்கமே இருந்தார். குஷ்புவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட வைத்தார் கருணாநிதி. இதன் பின்னர் அந்த செய்தி அமைதியானது. ஆனாலும் இந்த விசயத்தை பெரிது படுத்தி சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இதனால் குஷ்புவுக்கும் குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கும் இடையே புகைய தொடங்கிய பனிப்போர் இன்னும் முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை பற்றி அமைதிகாத்த குஷ்பு, தற்போது டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார்.

"இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே, இவர்களின் வீட்டுப் பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்' பற்றி எழுத வேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா?" என்று ஏதோ ஒரு மீடியாவை போட்டு தாக்கியிருக்கிறார்.

"அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை. புயலுக்கு முன் வரும் அமைதி இது அவதூறு எழுதும் ரிப்போர்டர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள்" என டிவிட்டரில் இன்று ஆரம்பித்தவர், அடுத்து காரசாரமாக பதிலளித்து வருகிறார்.

"இந்த கேவலமான ஆட்கள் விபச்சார புரோக்கர்களை போன்றவர்கள். இவர்களும் பெண்களின் பெயரையும் மரியாதையும் விற்றுத்தான் சம்பாதிக்கிறார்கள். தங்கள் வீட்டுப் பெண்களையே விற்கும் இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே இவர்களின் வீட்டு பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்' பற்றி எழுதவேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா?" என்று விளாசியிருக்கிறார்.

மிக மோசமான பிரச்னைகள் வந்தபோதும், தரக்குறைவாக ரியாக்ட் செய்யும் நபரல்ல குஷ்பு. அப்படியானவர், இன்று டுவிட்டரில் இப்படி போட்டு தாக்கியுள்ளார். எந்த மீடியாவை அல்லது நிருபரை குறிப்பிடுகிறார் என்பதை குஷ்புவும், சம்பந்தப்பட்டவர்களும் தான் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+