இவங்க பரம ஏழைகளாம்!... திருமண விழாவில் சூட்கேஸ், சீர்வரிசை பெற்ற அமைச்சர்களின் வாரிசுகள்!!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 65 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் மகள், மகன்களும் மணமக்களாய் பங்கேற்று இலவச சீர்வரிசை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் 65 வது பிறந்தநாளை ஒட்டி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திருமணம் நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 65 பரம ஏழை ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. முதல்வர் ஜெயல்லிதா இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணத்தில் மணமகனுக்கு பட்டுவேட்டி, பட்டு சட்டை, மணமகளுக்கு பட்டுசேலை, ஜாக்கெட்வழங்கப்பட்டது. 65 ஜோடிகளுக்கும், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட சீர்வரிசைகள் திருமணம் முடிந்த பின்னர் வழங்கப்பட்டது.
இந்த 65 திருமண ஜோடிகளில், ஏழையான தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கத்தின் மகள் அரூத்தி பிரியதர்ஷினி-என்.சிவக்குமார் திருமணத்தையும், பரம ஏழையான முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் ஆர். திவாகர் - காயத்ரி ஆகியோரின் திருமணத்தையும் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
இந்த ஜோடிகளுக்கும் பீரோ, கட்டில், தலையணை, மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, குக்கர், சூட்கேஸ், ஜமுக்காளம், சமையலுக்கு தேவையான பொருட்கள் உட்பட மொத்தம் 65 வகையான சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.
சீர்வரிசையில் கிடைக்கும் மின்விசிறி, கிரைண்டர், மிக்சி ஆகியவற்றுக்கு தேவையான மின்சாரம், வரும் ஜூன் மாதத்தில் இருந்து கிடைக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications