பாலியல் புகார்: இந்திய பேஷன் டிசைனருக்கு 59 ஆண்டுகள் சிறைத்தண்டனை... அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் ஜான், 1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற பேஷன் டிசைனராக இருந்தவர். பிரபல நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவரான ஆனந்த் ஜான் மீது, 2007 ஆம் ஆண்டு பாலியல் புகார் சுமத்தப்பட்டது.
பேஷன் உலகில் மாடலாக வலம் வருவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தங்களை பலவந்தப்படுத்தியதாக ஜான் மீது 7 பெண்கள் புகார் தெரிவித்தனர். இவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜான் மீது 49 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றங்களின் பேரில், கலிபோர்னியா சிறையில் 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ஜான் மீது, மான்ஹாட்டன் நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்று நடந்த விசாரணையின்போது தன் மீதான குற்றங்களில் ஒன்றை ஆனந்த் ஜான் ஓப்புக்கொண்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஆனந்த் ஜான் கலிபோர்னியாவில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனந்த் ஜானுக்கு ஏற்கனவே 59 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள நிலையில், டெக்சஸ், நியூயார்க்கிலும் அவர் மீதான குற்றங்களின் பேரில் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications