கூல்டிரிங்ஸ் போல பள்ளிக்கு பிராந்தி கொண்டுவந்த மாணவர்கள்… போலீஸ் அறிவுரை
பூதப்பாண்டி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இரண்டுபேர் கூல்டிரிங்ஸ் பாட்டிலில் பிராந்தி எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு மாண வன் ஒருவரும், 6ம் வகுப்பு மாணவன் ஒருவரும் குளிர்பான பாட்டிலில் குடிநீர் எடுத்து வருவது போல் பிராந்தி நிரப்பி எடுத்து வந்தனர். பள்ளி தலைமையாசிரியர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தார்.
பள்ளியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் ஒருவர் தங்களிடம் குளிர்பான பாட்டில் மற்றும் அதற்கான பணம் தந்து பிராந்தி வாங்கி வருமாறு கூறியதாகவும், அதன் பேரில் தாங்கள் வாங்கி வந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் களை பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு தலைமை யாசிரியர் அழைத்து சென்றார். மாணவர்களுக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாணவர்களிடம் பிராந்தி வாங்கி வரச்சொன்னது யார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications