சென்னையை இரவில் உலுக்கிய இடி, மின்னல், மழை

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கடுமையான இடி, மின்னலால் மக்கள் பீதியடையும் நிலை ஏற்பட்டது.
அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, லட்சத்தீவுகளுக்கும் ராஜஸ்தானுக்கும் இடையே நீடித்திருந்தது. அது தற்போது தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது வலுவிழந்த நிலையில் இருந்தாலும் கூட மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வட தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர்
உள்ளிட்ட மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யலாம்.
தென் தமிழகத்தில், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்பட மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த இடியும், மின்னலுமாக இருந்தது. சில இடங்களில் நல்ல மழையும், சில இடங்களில் லேசான மழையும் காணப்பட்டது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications