பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு.... 180பேர் படுகாயம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நேற்று சக்திவாய்ந்த ஒரு குண்டு வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
குவெட்டா நகரில் நேற்று இரவு ரிமோட் கண்ட்ரோல் மூலம் பயங்கர குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 81 பேர் பலியானார்கள். 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குவெட்டா நகரின் மக்கள் நெருக்கம் மிகுந்த மார்க்கெட் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதனால்தான் உயிரிழப்பும், படுகாயமும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.












Click it and Unblock the Notifications