தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: சொல்கிறார் ரமணன்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
லட்சத்தீவில் இருந்து கர்நாடகாவை ஒட்டி இருக்கும் அரபிக்கடல் பகுதி வரை காற்றழுத்த தாழ்வுநிலை நிலை கொண்டுள்ளது. இதனால் நேற்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பவானி, சங்ககிரி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
மேலும் ஈரோடு, திருப்பூர், தென்காசி, குமாரபாளையம், பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது தவிர விருத்தாசலம், மாயனூர், ஆர்.கே.பேட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவிலில் தலா 4 செ.மீ. மழையும், பென்னாகரம், விழுப்புரம், சிவகாசி, கரூர், கோவிலாங்குளம், பேரையூர், ஊத்தங்கரை, செங்குன்றம், பெரம்பலூரில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் 24 மணிநேரம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இன்று மழை பெய்யக்கூடும். சென்னையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications