For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பந்த்னா வேலைக்கு வரமாட்டியா? பஞ்சாயத்து ஊழியர் காதை அறுத்த மமதா கட்சியினர்

By Siva
Google Oneindia Tamil News

Mamata Baner
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதற்காக பஞ்சாயத்து ஊழியர் ஒருவரின் காதை கத்தியால் அறுத்துள்ளனர் ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸார்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பஞ்சாயத்து ஊழியராக இருப்பவர் ஹஸ்ரத் உமர். அவர் நேற்று வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரிடம் ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்டனர். தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நடப்பதால் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திரிணாமூல் காங்கிரஸார் உமரின் காதை அறுத்துவிட்டனர்.

இது குறித்து உமர் கூறுகையில், அவர்கள் கத்தியை வைத்து என் காதை அறுத்து எடுத்தனர் என்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் நேற்று வேலைக்கு வந்துவிட்டனர் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் உமர் வேலைக்கு செல்லாத விஷயம் அறிந்த திரிணாமூல் காங்கிரஸார் அவரின் காதை அறுத்துவிட்டனர்.

English summary
Trinamool congress workers have chopped off the ear of a panchayat worker in Murshidabad district of West Bengal for not reporting to work yesterday, that is the first day of the 2 day strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X