மதுரையில் ஆசிரியையை தாக்கிய 10ம் வகுப்பு மாணவர், மிரட்டிய தாய் கைது
மதுரை: மதுரையில் பள்ளி ஆசிரியையை தாக்கிய 10ம் வகுப்பு மாணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்தவர் சுகந்தி(43). அவர் தல்லாகுளம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தல்லாகுளம் கண்மாய்கரையைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரின் மகன் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த அம்மாணவரின் செயல் ஆசிரியை சுகந்திக்கு தவறாக தெரிந்தததால் அவரை கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர் சுகந்தியை கைகளால் தாக்கினார். உடனே இது குறித்து மகாலட்சுமிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த அவர் மகனுக்காக பரிந்து பேசினார். ஆனால் சுகந்தி அவரது சமாதானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி, என் பையன் ஏதாவது செய்து கொண்டால் நீங்கள் தான் பொறுப்பு என்று ஆசிரியையை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் மாணவர் மற்றும் அவரது தாய் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஆசிரியையை மிரட்டிய மகாலட்சுமியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications