'பொள்ளாச்சியில் பேசுவதென்றால் காதலியின் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போல...!'

கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சித் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
"பொள்ளாச்சியில் பேசுவதென்றால் காதலியின் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற தித்திப்பான அனுபவம்" என்று அவர் பேசத் தொடங்கியதும், லோக்கல் அ.தி.மு.க.-வினர், ‘ஆஹா சூப்பர் என்று நிமிர்ந்து அமர்ந்து பேச்சை கேட்க தொடங்கினர்.
கட்சிக்காரர்களின் உற்சாகத்தை கவனித்த, சம்பத், "இதுவரை கடலில் மழை பெய்த நான், இப்போது அ.தி.மு.க. என்னும் கழனியில் மழை பெய்ய வந்து இருக்கிறேன்" என்று அடுத்த அஸ்திரத்தை எடுத்து வீசினார்.
"தங்கத்தை எத்தனை முறை உரசினாலும் தகதகவென்றுதான் மின்னும். அதுபோன்று அ.தி.மு.க.விற்கு என்ன சோதனை வந்தாலும் தங்ககோபுரம் போல் தலைநிமிர்ந்து நிற்கும். உழைத்தால் பலன் கிடைப்பது அ.தி.மு.க.வில்தான்" என்று கூறியபடி தனது பையில் இருந்த இன்னோவா கார் சாவியை ஒருமுறை தொட்டு பார்த்துக்கொண்டார் நாஞ்சில் சம்பத்!
பொள்ளாச்சி கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சு அதிமுகவினரிடையே அட்டகாசமான வரவேற்பை பெற்றுவிட்டதாம்.












Click it and Unblock the Notifications