Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க டிவி நிருபரானார் மைக்கேல் ஜாக்சன் மகன்!

Subscribe to Oneindia Tamil

Michael Jackson son
நியூயார்க்: பிரபல பாப் இசைச் சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் மகன் அமெரிக்க தொலைக்காட்சியில் நிருபராக பணியில் சேர்ந்துள்ளார்.

உலகின் புகழ்பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், முதல் மனைவி லிசி மேரி பிரஸ்லி என்பவரை விவாகரத்து செய்த பின் இரண்டாவதாக டெப்பி ரோவி என்பவரை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு பிரின்ஸ் என்ற மகனும் பாரீஸ் என்ற மகளும் உள்ளனர். ஜாக்சனின் மூத்த மகன் பிரின்சுக்கு தற்போது 16 வயதாகிறது.

இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள தொலைக்காட்சி நிலையமொன்றில் பிரின்சுக்கு வேலை கிடைத்துள்ளது "என்டர்டெய்ன்மென்ட் டு நைட்" என்ற பெயரில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியின் சிறப்பு நிருபராக பிரின்ஸ் பணியமர்த்தப்பட்டுள்ளான். பிரபலங்களை பேட்டி காணும் பொறுப்பு, பிரின்சுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பிரின்ஸ், என் தந்தையின் செல்வாக்கால் தான், எனக்கு இந்த வேலை கிடைத்துள்ளது. இதற்காக என் தந்தைக்கு, நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றார். அதே நேரத்தில் இந்த வேலையை திறமையாக செய்ய வேண்டும் என்ற பொறுப்பும் எனக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டில் அதிக படியான வலி நிவாரணி மருந்துகளை செலுத்தப்பட்டதால் மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தார். அவர் மரணித்தாலும், அவரைப் பற்றிய செய்திகள் இன்றைக்கும் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+