சிறையில கைதியுடன் சல்லாபம்.. கையும் களவுமாக சிக்கிய நர்ஸ்
லண்டன்: இங்கிலாந்து சிறையில் நர்ஸ் ஒருவர் அங்குள்ள கைதி ஒருவருடன் அரை நிர்வாண கோலத்தில் கசமுசாவில் ஈடுபட்டு சிக்கி சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.
அந்த நர்ஸின் பெயர் ஜேன் ஜாக்சன். இவர் இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் என்ற இடத்தில் உள்ள சிறை மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். இந்த சிறை இங்கிலாந்தின் பரபரப்பான சிறைகளில் ஒன்றாகும். இங்குதான் நாட்டின் பயங்கரமான கைதிகள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகள், கற்பழிப்புக் குற்றங்களில் ஈடுபட்டோர் மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டோர் என பயங்கரமான ஆட்கள்தான் இங்கு அதிகம் உள்ளனர்.
இந்த சிறையின் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்த ஜேன், அங்குள்ள ஒரு கைதியின் அறைக்குப் போயுள்ளார். பின்னர் தரையைத் துடைக்கப் பயன்படும் மாப்பை எடுத்து கதவுக்கு அண்டக் கொடுத்து மூடியுள்ளார். பின்னர் தனது உடையைக் கழற்றி அரை நிர்வாண கோலத்தில் அந்தக் கைதியுடன் கசமுசாவில் ஈடுபட்டார்.
இந்தத் தகவல் சக கைதிகள் மூலம் சிறை நிர்வாகத்திற்கும் நர்ஸிங் கவுன்சிலுக்கும் பரவியது. இதையடுத்து நர்ஸிங் கவுன்சில் விசாரணை நடத்தியது.
விசாரணைக்குப் பின்னர் அவர் வேண்டும் என்றே செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பதால் அவர் இனிமேல் நர்ஸாகப் பணியாற்றும் தகுதியை இழக்கிறார் என்று கூறி இனிமேல் அவர் நர்ஸாகப் பணியாற்ற தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாம். சம்பவம் நடந்தபோது மேலாடை எதுவும் இல்லாமல் இருந்தாராம் ஜேன். மேலும் தனது பிராவையும், மேலாடையையும் ஒரு கையில் பிடித்தபடி இன்னொரு கையால் கைதியைப் பிடித்தபடியும் இருந்தாராம்.
ரிபெக்கா என்பவர் திடீரென அந்த அறைக்கு வந்தபோதுதான் ஜேனின் செயல் அம்பலமானது. ஜேன் நின்ற கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம் ரிபெக்கா.












Click it and Unblock the Notifications