பொட்டு சுரேஷ் கொலையில் மேலும் 5 பேர் கைது... எண்கவுண்டர் பயத்தில் ‘அட்டாக்’ பாண்டி

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் நண்பரான பொட்டு சுரேஷ் கடந்த திமுக ஆட்சிகாலத்தில் மதுரையில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர். இவர் கடந்த 31ம் தேதி அவரது வீட்டின் அருகிலேயே மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக அட்டாக் பாண்டி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் சந்தானம் உள்ளிட்ட 7 பேர் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, அவனது நண்பன் ஆரோக்கிய பிரபு ஆகியோரின் பெயரை கூறியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களையும் கஸ்டடி எடுத்து விசாரித்த போலீ1 முக்கிய தகவல்களை கறந்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் அட்டாக் பாண்டி எங்கிருக்கிறார் என்பது பற்றி மட்டும் வாய் திறக்கவில்லையாம்.
மனைவியிடம் விசாரணை
அட்டாக் பாண்டியை குறிவைத்திருக்கும் போலீஸ் அவரது மனைவி தயாளுவை ஒன்றரை வயது குழந்தை சங்கமித்திரையுடன் கடந்த 11ம் தேதி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனராம். எட்டு நாட்கள் போலீஸ்டேசனில் வைத்து விசாரித்தும் வாயே திறக்கவில்லையாம். தன் கணவரை என்கவுண்டரில் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்திலேயே இருக்கிறாராம் அட்டாக் பாண்டியின் மனைவி. அரசியல் சதியில் தன்னுடைய கணவர் சிக்கவைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி வருகிறார்.
துரை தயாநிதியிடம் விசாரணை
இதனிடையே பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக அழகிரியின் மகன் துரை தயாநிதி, மருமகன் வெங்கடேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பொட்டு
சுரேஷ் கொலைக்கு முன்பாக சென்னையில் இந்த இருவரும் அட்டாக் பாண்டியை சந்தித்து பேசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
5 பேர் கைது
இந்த நிலையில் சுரேஷ் கொலை தொடர்பாக அட்டாக் பாண்டியின் முன்னாள் வாகன ஓட்டுநர் சிற்பி சரவணன், மதுரையைச் சேர்ந்த பிரேம் குமார், ஜோதி வேலன், முத்து பாண்டி, பாண்டிய ராஜன், ஆகிய ஐந்து பேரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் அட்டாக் பாண்டியை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள 6 தனிப்படைகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications