மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன் : சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு கணவரும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசோக் நகரை சேர்ந்தவர் லாவண்யா (வயது 32). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சீனிவாசன் (34) என்பவருக்கும் 9 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில்சீனிவாசன் நேற்று லாவண்யாவைப் பார்க்க அவரது அலுவலகத்திற்குச் சென்றார். இருவரும் வரவேற்பரையில் பேசிக்கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லாவண்யாவின் கழுத்தில் அறுத்தார். இதைப் பார்த்த அவரது சக ஊழியர் கிளமெண்ட் என்பவர் தடுக்க முயற்சி செய்யவே அவரையும் கத்தியால் குத்தினார் சீனிவாசன். இதனையடுத்து தன்னுடைய கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டார் சீனிவாசன்.
இதைப் பார்த்த மற்ற ஊழியர்கள் விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த சீனிவாசன், லாவண்யா மற்றும் கிளமெண்ட் ஆகியோரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிளமெண்ட் லேசான காயத்துடன் தப்பினார். சீனிவாசனும், லாவண்யாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications