16 கோவில்களுக்கான 22 கட்டிடங்களை முதல்வர் ஜெ. திறந்து வைத்தார்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழகம் முழுவதும் 16 கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட 22 புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

பழனி கோயிலில்....

பக்தர்களின் வசதிக்காக பழனி கிழக்கு கிரிவீதியில் 2 கோடியே 63 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா பேருந்து வளாகம்; பழனி மலைக்கோயில் வெளிப் பிரகாரத்தில் 3 கோடியே 86 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கிரானைட் தளவரிசை; மலைக்கோயில் கம்பிவட ஊர்தி செல்லும் வழியில் சுற்றுலாத் துறையின் நிதி 73 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மற்றும் திருக்கோயில் நிதி 72 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர் ஊற்றுடன் கூடிய பூங்கா; மலைக்கோயிலுக்கு பஞ்சாமிர்தம் மற்றும் இதர பொருட்கள் கொண்டு செல்ல 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஏற்றிச் செல்லும் கம்பிவட ஊர்தி; பாத யாத்திரை வரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக மதுரை பழனி சாலையில் ஆத்தூர் வட்டம் கன்னிவாடி கிராமத்தில் 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவடி மண்டபம்; மலைக்கோயிலில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நன்கொடையாளர் வரவேற்பு மையம்; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக சுற்றுலாத்துறை நிதி 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் திருக்கோயில் நிதி 41 லட்சம் ரூபாய், என மொத்தம் 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி;

ஸ்ரீரங்கத்தில்...

ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்ருவாகத்தின் கீழ் உள்ள லால்குடி வட்டம், அன்பில், அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்; ஈரோடு மாவட்டம், பவானி, அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் புராதன நகர மேம்பாட்டுத் திட்ட நிதியின் மூலம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 ஓய்வு அறைகள் மற்றும் பக்தர்கள் ஓய்வுக்கூடம்; சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர், அருள்மிகு வெள்ளைப் பிள்ளையார் திருக்கோயிலில் 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செயல் அலுவலர் மற்றும் ஆய்வர் அலுவலகங்கள், நூலகம் மற்றும் திருக்கோயில் மடப்பள்ளி; தூத்துக்குடி, அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் உபயதாரர் மூலம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்; இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் உள்ள குற்றாலம், பண்பொழி, ஸ்ரீ திருமலைக்குமார சுவாமி தேவஸ்தானம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வுக்கூடம்;

நெல்லையப்பர் கோயிலில்..

திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் கருணை இல்ல மாணவியர் விடுதியில், நமக்கு நாமே திட்ட நிதி 39 லட்சம் ரூபாய் மற்றும் கருணை இல்ல நிதி 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சுவாமி நெல்லையப்பர் கருணை இல்ல மாணவியர் தங்கும் விடுதி; திருப்பூர் மாவட்டம், சிவன் மலை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் வளாகத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கருணை இல்லம்; சென்னை, கோயம்பேடு, அருள்மிகு குறுங்காலீசுவரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் 57 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்; இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 9 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வரவேற்பு மற்றும் தகவல் மையம்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 1 கோடியே 55 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைந்த விழுப்புரம் மண்டல இணை ஆணையர் அலுவலகம் மற்றும் பரிக்கல் கிராமத்தில் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உளுந்தூர் பேட்டை வட்ட ஆய்வாளர் அலுவலகம்; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் வளாகத்தில் 76 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பு;

சென்னையில்....

சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பு;சென்னை, கீழ்ப்பாக்கம், அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோயிலில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருக்கோயில் அலுவலகம் மற்றும் மடப்பள்ளி; திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புளியங்குடி சரக ஆய்வாளர் அலுவலகம்; என மொத்தம், 15 கோடியே 64 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்துவைத்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+