குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த மாமியாருக்கு துப்பாக்கிச் சூடு- மருமகனுக்கு போலீஸ் வலை
திருவண்ணமலை: கலசபாக்கம் அருகே மாமியாரை துப்பாக்கியால் சுட்ட மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த காங்கயனூரைச் சேர்ந்தவர்கள் மாயகிருஷ்ணன் - ராணி தம்பதியினர். இவர்களுக்கு 8 மகள், 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகள் மலரை போளூர் அருகே எடப்பிறையைச் சேர்ந்த நாகப்பனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
மலருக்கும் நாகப்பனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அவ்வப்போது மனைவி மலரை நாகப்பன் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வருவாராம். அண்மையிலும் இதேபோல் தகராறு ஏற்பட தாய் வீட்டுக்குப் போயிருக்கிறார் மலர். வழக்கம் போல நாகப்பனும் மாமியார் வீட்டுக்குப் போய் மனைவி மலரை அழைத்திருக்கிறார்.
ஆனால் இம்முறை மலர் வர மறுத்திருக்கிறார். இதனால் மலரின் தாய் ராணிக்கும் நாகப்பனுக்கும் இடையே தகராறு வெடித்திருக்கிறது. பின்னர் தாம் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் மாமியார் ராணியை சுட்டுவிட்டு நாகப்பன் தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நாகப்பனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications