பொருளாதார வளர்ச்சி 6.7%க்குள் தான் இருக்கும் என்கிறது சர்வே: இதோ, 7 முக்கிய பாயிண்டுகள்!

அதில், 2013-14ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம் முதல் 6.7 சதவீதம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் ஆலோசகராக நியமிக்கபட்ட ரகுராம் ராஜன் தயாரித்துள்ள இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
1. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம் முதல் 6.7 சதவீதமாக இருக்கும்.
2. ஒட்டுமொத்த பணவீக்கம் வரும் மார்ச் மாதத்துக்குள் 6.2 சதவீதம் முதல் 6.6 சதவீதமாகக் குறையும்.
3. நாட்டின் செலவைக் குறைக்க டீசல் மற்றும் சமையல் கேஸ் மீதான மானியத்தைக் குறைத்து அவற்றின் விலையை உயர்த்தியாக வேண்டும்.
4. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் (இப்போது மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் பேர் தான் வருமான வரி செலுத்துகின்றனர் என்பதும், இந்தப் பணத்தை வைத்து 98 சதவீதம் பேருக்கு நாடு பணத்தை செலவழித்துக் கொண்டுள்ளது என்பதும் கொடூரமான உண்மை).
5. தங்கத்தில் போடப்படும் முதலீட்டால் நாட்டுக்கு பயன் இல்லை என்பதால், தங்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும். இதன்மூலம் அன்னியச் செலவாணி கரைவதைத் தடுக்க முடியும். நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் குறையும் (தங்கத்தில் முதலீடு செய்யப்படும் பணம் நாட்டின் பங்கு பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டால், அந்தப் பணத்தை சாலைகள் அமைக்க, அணைகள் கட்ட என அடிப்படைக் கட்டமைப்புக்கு பயன்படுத்த முடியும். ஆனால், மக்களுக்கு பாதுகாப்பான முதலீடு தங்கம் தான் என்பதால் அதில் தான் பெரும்பாலான மக்கள் பணத்தை முடக்குகின்றனர். இதனால் நாட்டுக்கு பயனில்லை)
6. எப்பாடுபட்டாவது பண வீக்கத்தைக் குறைக்க வேண்டும்.
7. நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து நல்ல நிலையில் இருந்து வருகிறது. இப்போது நம்மிடம் 295.6 பில்லியன் டாலர் அன்னியச் செலாவணி உள்ளது (சந்திரசேகர் என்ற ஒருவர் நமது பிரதமராக இருந்தபோது பெட்ரோலிய இறக்குமதி செய்யக் கூட அன்னியச் செலாவணி கையில் இல்லாமல், நமது ரிசர்வ் வங்கியிடம் இருந்த தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி அடகு வைத்தது நினைவுகூறத்தக்கது)
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications