வாய் பேச முடியாத மகனின் சம்பளத்தை குடித்து காலி செய்த தந்தை கொலை
நெல்லை: நெல்லை அருகே சம்பளப்பணத்தை எடுத்து குடித்த தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலைசெய்த மாற்றுத்திறனாளி மகன் தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை அடுத்துள்ள மேலபுத்தனேரியை சேர்ந்தவர் செல்லப்பா 50. சமையல் தொழிலாளி. இவரது மகன் சிவா 21. வாய்பேச இயலாதவர். தந்தையுடன், சமையல் தொழிலுக்கு சென்றுவந்தார். சிவாவின் வருமானத்தையும் செல்லப்பா குடித்துவிடுவாராம். இதனால் சிவா மனமுடைந்திருந்தார். இதுதொடர்பாக வீட்டில் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சிவா, படுத்திருந்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். பின்னர் விஷம் குடித்து தானும் தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து நெல்லை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வாய்பேச முடியாத மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications