குஜராத்தில் என்.ஜி.ஓக்கள் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன-கிஷோர் திரிவேதி
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 28-ந் தேதி வந்துவிட்டாலே போதும்.. என்.ஜி.ஓக்களின் கோஷம் காதைப் பிளக்கும்.. இவர்களை அனுமதிக்காதீர்கள் என்று அரசுக்கு குல்பெர்க் சொசைட்டியினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக சமூகவியலாளர் கிஷோர் திரிவேதி எழுதியுள்ள கட்டுரையில், ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ந் தேதி குஜராத்தில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த கலவரத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திருக்கிறோம் என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.க்கள்) அகமதாபாத்தில் குவிந்து விடுகின்றன.
இந்த தன்னார்வ நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என்று குல்பெர்க் சொசைட்டியினர் அகமதாபாத் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றனர். பல தன்னார்வ நிறுவனங்கள் குஜராத் கலவரத்தை முன்வைத்து வெளிநாட்டில் இருந்து நிதி சேகரித்து வருகின்றன.
அண்மையில் மத்திய திட்டக் குழு உறுப்பினர் சயீதா ஹமீத் தமது வீட்டையே என்.ஜி.ஓ ஒன்றுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்திருப்பதை பாஜக தேசிய துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான பர்ஷோத்தம் ரூபலா அம்பலப்படுத்தியிருந்தார். இந்த என்.ஜி.ஓவை நடத்தி வருபவர் ஷப்னா ஹாஸ்மி.
இதேபோல் டீஸ்டா ஸ்டல்வாட் என்ற மற்றொரு என்.ஜி.ஓ. நிர்வாகி எப்படி தேச விரோத மனோபாவம் கொண்டவர் என்பதையும் அவருடன் இருந்தவரே அம்பலப்படுத்தியிருக்கிறார். அவர் எப்பொழுதும் குஜராத் அரசுக்கு எதிராகத்தான் பேசக் கூடியவர்.
குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரையில் கடந்த 3 சட்டசபை தேர்தல்களிலும் பாரதிய ஜனதா தான் வென்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் பல இஸ்லாமியர்கள் பாஜகவில் இணைந்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். ஆனால் இந்த என்.ஜி.ஓக்கள்தான் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன என்று அவர் கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications