ரூ. 7,500 கோடியில் தூத்துக்குடியில் புதிய துறைமுகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். அப்போது அவர் ரூ.7,500 கோடி செலவில் தூத்துக்குடியில் புதிய துறைமுகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இது தவிர மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவிலும் 2 புதிய துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றார்.
மேலும் சென்னை-பெங்களூர் தொழில்துறை காரிடார் அமைக்கும் திட்டத்தின் ஆரம்ப பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்றும், இந்த காரிடாரை தமிழகம், ஆந்திரா, கர்நாடக அரசுகள் இணைந்து அமைக்கும் என்றார்.
இது தவிர குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இரு தொழில் நகரங்கள் அமைக்கப்படுகின்றன. 1,000 பேர் கொண்ட அனைத்து ஊர்களிலும் எல்.ஐ.சி. அலுவலகம் அமைக்கப்படுகிறது. வங்கிகளிலும் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications