பெண்கள் பாதுகாப்பு: பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி 'நிர்பயா நிதி' ஒதுக்கிய சிதம்பரம்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதால் இறந்த 23 வயது பிஸியோதெரபி மாணவியின் புனைப்பெயரில் இந்த நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
2013-2014ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக சில அறிவிப்புகளை வெளிட்டார்.
அதன் விவரம் வருமாறு,
பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதற்காக 'நிர்பயா பெண்கள் நிதி' உருவாக்கப்படும். டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதால் உயிர் இழந்த 23 வயது பிஸியோதெரபி மாணவியின் புனைப்பெயர் தான் நிர்பயா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை.
பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி துவக்கப்படும். இந்த பெண்கள் வங்கி கிளைகள் நாடு முழுவதும் துவங்கப்படும். இது இந்தியாவின் முதல் பொதுத்துறை பெண் வங்கியாக இருக்கும். இதற்காக முதல் கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும். 13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 14,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ ஆய்வுக் கழகம் போல மேலும் 6 ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.
ஜவுளிப் பூங்காங்களுக்கு ரூ. 50,000 கோடி ஒதுக்கப்படும். கைத்தறி தொழில்துறை நசிந்து போயுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட பெண்கள். கைத்தறித்துறை கடன்களுக்கான வட்டியை ரத்து செய்ய ரூ. 96,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
புதிதாக 294 எப்எம் ரேடியோ நிலையங்கள்:
புதிதாக 294 எப்எம் ரேடியோ நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 1 லட்சம் பேர் கொண்ட எல்லா ஊர்களிலும் தனியார் எப்எம் ரேடியோ ஸ்டேஷன் அமைக்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications