சட்டத்துறைக்கு வந்தால் இதே கதிதான்... செக்ரட்டரியேட்டை கலக்கும் சென்டிமென்ட் பூதம்
சென்னை: தலைமைச் செயலகம் பக்கம் போய் வந்தால் ஒரு பேச்சு படு சூடாக உலவுவதைக் கேட்க முடியும். அதாவது சட்டத்துறைக்கு யார் அமைச்சராக வந்தாலும் அவர்கள் நீடிக்க மாட்டார்கள் என்ற பேச்சுதான் அது. அதுவும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சட்டத்துறைக்கு யார் அமைச்சராக வந்தாலும் வெகு சீக்கிரமே அவர்கள் வீட்டுக்குப் போய் விடுகிறார்கள் என்று கூறுகிறது இந்த மோசமான சென்டிமென்ட் பேச்சு.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதலில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் இசக்கி சுப்பையா.இவர் பெரும் சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்தார். பின்னர் செந்தமிழன் வசம் இப்பொறுப்பு வந்தது. அவரும் சில மாதங்களிலேயே தூக்கப்பட்டார். அதன் பின்னர் திருச்சி பரஞ்சோதி நியமிக்கப்பட்டார். அவர் 2வது மனைவி சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்தார். வந்த வேகத்தில் இவர்வீடு திரும்பினார்.
அதன் பின்னர் சி.வி.சண்முகம் சட்ட அமைச்சரானார். நல்ல பெயருடன் இருந்து வந்த அவர் காரணமே இல்லாமல் திடீரென பதவியை இழந்து வெளியேறினார். இதையடுத்து சிவபதியிடம் பொறுப்பு வந்தது. அவர் ஏற்கனவே ஒருமுறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன் அனுபவம் கொண்டவர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் பதவியை இழந்துள்ளார்.
தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமியிடம் சட்டத்துறை கூடுதல் பொறுப்பாக போய்ச் சேர்ந்துள்ளது. இதனால் முனுசாமியின் ஆதரவு வட்டடாரம் பெரும் கலக்கத்தில் உள்ளதாம்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications