மாரடைப்புக்கு காற்று மாசும், ஓசோன் மண்டல ஓட்டையும் காரணம்: ஆய்வில் அதிர்ச்சி
அதிக அளவில் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவதற்கு காற்று மாசும், ஓசோன் அளவும் தான் காரணம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஹூஸ்டனைச் சேர்ந்த ரைஸ் பல்கலைக்கழக புள்ளியில் நிபுணர்களான காத்தரீன் என்சார் மற்றும் லோரன் ரான் ஆகியோர் கடந்த எட்டு ஆண்டு கால புள்ளிவிவரத் தகவல்களை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் இதனை கண்டறிந்துள்ளனர்.
இதன் மூலம் எப்போதெல்லாம் காற்று மாசு அதிகரித்திருந்ததோ அப்போதெல்லாம் ஹூஸ்டன் நகர மருத்துவமனைகளில் மாரடைப்பு ஏற்பட்டு பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
கோடையில் அதிகம்
மாரடைப்பு ஏற்பட்ட இறந்தவர்கள் குறித்த விவரத்தை ஆய்வு செய்தபோது அதில் 90 சதவீதம் பேர் கடுமையான கோடை காலத்தில்தான் இறந்துள்ளனர் என்று தெரிய வந்தது. இதற்கு ஓசோன் அளவு கடும் கோடைகாலத்தில் மிகவும் குறைவாக இருந்தது காரணமாகஇருக்கலாம் என்பது இவர்களின் வாதம்.
ஓசோன் ஓட்டை முக்கிய பங்கு
காற்று மாசு அதிகரித்தபோது கிட்டத்தட்ட 11,000 பேர் மாரடைப்பு காரணமாக ஹூஸ்டன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காற்று மாசுடன் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையும் கூட மாரடைப்பு ஏற்படமுக்கியப் பங்கு வகிப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.
ஆக்ஸைடு வாயுக்களின் ஆதிக்கம்
காற்று மாசடைவதற்கு வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதே காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல நைட்ரஜன் டைஆக்ஸைடு, சல்பர் டைஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றின் அளவும் கூட மாரடைப்பு ஏற்பட்டவர்களை கணிசமாக பாதித்துள்ளதாம்.
இந்தியாவில் கடும்பாதிப்பு
உலக அளவில் காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகள் வரிசையில் முக்கிய இடத்தில் இருக்கிறது இந்தியா. மேலும் இங்கு மாரடைப்பு ஏற்பட முக்கியமான 5வது காரணமாக காற்று மாசு திகழ்கிறது.
அதிலும் டெல்லிதான் மிக அதிக அளவில் காற்று மாசுடன் திகழும் நகராக உள்ளதாம்.
வட மாநிலங்களில் மாசு
இந்தியாவில் அதிக காசு மாற்று உள்ள நகரங்களாக டெல்லி, காசியாபாத்,குவாலியர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்க்பும் மாவட்டம் மற்றும் ராய்ப்பூர் ஆகியவை விளங்குகின்றன.
6 மடங்கு அதிகம்
இந்தியாவில் 6.2லட்சம் பேர் காற்று மாசு காரணமாக பிறப்பதற்கு முன்பே மரணத்தைசந்தித்துள்ளனர். இது கடந்த 2000மாவது ஆண்டிலிருந்து 6 மடங்கு அதிகமாகும்.
உயர் ரத்த அழுத்தம்
இந்தியாவைப் பொறுத்தவரை மாரடைப்பு ஏற்பட முதல் காரணம் உயர் ரத்த அழுத்தமாகும். அடுத்து உள்ளரங்க காற்று மாசு, புகையிலை, புகைப்பிடிக்கும் பழக்கம், சரியான சாப்பாடு சாப்பிடாதது ஆகியவையும் முக்கியக் காரணங்களாக விளங்குகின்ரன.
பக்கவாத பாதிப்பு
மாரடைப்பு தவிர பக்கவாதம் பாதிப்புக்குள்ளாவோரில் 25 சதவீதம் பேருக்கு காற்று மாசே காரணமாக உள்ளதாம். மேலும், இருதய நோயைச் சந்திப்பவர்களில் 48.6 சதவீதம் பேருக்கும் காற்று மாசே முக்கிய எதிரியாக உள்ளது.
சீனாவில் கட்டுப்பாடு
சீனாவில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு டின்களில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்று விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்த அம்மாநில முதல்வர் ஷீலா தீக்ஷித் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கேள்வியாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications