கார் ஓட்டியபோது மாரடைப்பு.. பொறுப்புடன் பயணிகளைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்த டிரைவர்
திருப்பதி: திருப்பதியைச் சேர்ந்த ஒரு டாக்சி டிரைவர் கார் ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு துடித்தார். அந்த நிலையிலும் கூட காரை பொறுப்பாக நிறுத்தி பயணிகளைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்தார்.
திருப்பதியைச் சேர்ந்தவர் மஸ்தான் பாஷா. 40 வயதான இவர் கார் டிரைவராக உள்ளார். இவர் கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்களை காரில் ஏற்றிச் செல்லும் பணியில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
நேற்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களை தனது காரில் திருமலைக்கு அழைத்து சென்றார். இரண்டு வளைவுகளை தாண்டினால் கோவிலை சென்றடைய முடியும் என்ற நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தபடியே காரை ஓட்டினார்.
செய்கையால் நெஞ்சு வலிப்பதை காரில் வந்த பக்தர்களிடம் தெரிவித்த அவர் காரின் வேகத்தை குறைத்து மெதுவாக ஒரு தடுப்பு சுவரில் மோதி நிறுத்தினார். காரில் இருந்த பக்தர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சு வருவதற்குள் மஸ்தான் பாஷா பரிதாபமாக இறந்தார்.
மஸ்தான் பாஷாவின் பொறுப்பும், மரணத்தின் தருவாயிலும் அவர் காட்டிய விவேகமும் அனைவரையும் உருக வைத்து விட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications