ராஜபக்சேவை சந்தித்து பேசிய சுப்பிரமணியம் சாமி
Subscribe to Oneindia Tamil

இவர்கள் அனைவரும் கூடி என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. நேற்று ராஜபக்சேவின் அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஒரு தீவிரவாதி, அவரது மகன் பாலச்சந்திரனும் தீவிரவாதி என்று சொல்லி வருபவர் இந்த சாமி. மேலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசி வருபவர்.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு பெரும் சிக்கல் ஏற்படவுள்ளது. இதிலிருந்து தப்பும் வழி என்ன என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது இலங்கை. எனவே சாமியைக் கூப்பிட்டு அவர்கள் ஆலோசனை கேட்டிருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications