எப்பப் பார்த்தாலும் சந்தேகம்... கணவர் மீது கொண்ட கோபத்தில் மனைவி தற்கொலை
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனது நடத்தை குறித்து அடிக்கடி சந்தேகப்பட்டு தொல்லை கொடுத்து வந்த கணவர் மீது கொண்ட கோபத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
வாழப்பாடி அருகே உள்ள கோலாத்து கோம்பை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள் (26). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. லோகேஸ்வரன் என்ற மகனும், லோகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
பெரியசாமிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவி வள்ளியம்மாளிடம் தகராறு செய்து வந்தார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டும் பேசி வந்தார்.
இதனால் மனம் உடைந்த வள்ளியம்மாள் இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் பெரியசாமியை அழைத்து எச்சரித்து சமரச பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் வழக்கம் போல் குடித்து விட்டு பெரியசாமி வள்ளியம்மாளிடம் தகராறு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் பெரியசாமியின் தொல்லை தாங்காத வள்ளியம்மாள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications