குண்டுவெடிப்பு சம்பவம்: ஹைதராபாத் போலீஸ்- தேசிய புலனாய்வு ஏஜென்சி இடையே அக்கப்போர்!

ஹைதராபாத்தில் கடந்த மாதம் 21-ந் தேதி இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 15 தனிப்படைகளை அமைத்து ஹைதராபாத் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சியும் விசாரணை நடத்தியது. பின்னர் தங்களிடம் இந்த வழக்கை ஒப்படைக்கவும் ஹைதராபாத் போலீசிடம் கோரியது. ஆனால் நாங்களே விசாரித்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டது ஹைதராபாத் போலீஸ்.
இதனிடையே டெல்லி திஹார் சிறையில் உள்ள மக்பூல் மற்றும் இம்ரான் கான் ஆகியோரை விசாரணைக்காக ஹைதராபாத் கொண்டு வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறது தேசிய புலனாய்வு ஏஜென்சி. இவர்கள் இருவரிடமும் முக்கிய தகவலைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இதனால் வழக்கை தங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று மீண்டும் ஹைதராபாத் போலீசிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் மீண்டும் அவர்கள் மறுத்துவிட்டனர்.
இந்த விவகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டது. உள்துறை அமைச்சகமும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியிடம் பேசியது. ஆனால் ஹைதராபாத் போலீசாராரோ இந்த சிறப்புப் புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது.
வெடிகுண்டு வைத்த தீவிரவாதிகளைப் பிடிக்க வேண்டிய இரண்டு விசாரணை அமைப்புகளும் இப்படி தங்களுக்குள் ஈகோ யுத்தம் நடத்திக் கொண்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications