ஐ.ஆர்.சி.டி.சி. சாதனை: ஒரேநாளில் 5.02 லட்சம் இ-டிக்கெட்டுகள் முன்பதிவு
டெல்லி: ஒரேநாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) வெள்ளிக்கிழமை சாதனை படைத்திருக்கிறது.
தட்கல் புக்கிங் மற்றும் பண்டிகை காலங்களில் ஒட்டுமொத்தமாக அனைவரும் புக்கிங் செய்வதால் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இணையதளம் முடங்கிவிடும். இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஐ.ஆர்.சி.டி.சி. இந்த சாதனையை எட்டியுள்ளது என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமீபத்தில் இணையதளத்தின் செயல்திறனை அதிகரிக்கவும், மென்பொருள் லைசென்ஸ்கள், சேமிப்பு பரப்பு நெட்வொர்க் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக ரூ.3 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்போது இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தட்கல் சமயங்களில் முன்பதிவு 40 முதல் 45 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி 4.96 லட்சம் முன்பதிவு செய்யப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. நேற்று அந்த சாதனை முறியடிக்கப்பட்டு 5.02 லட்சம் இ.டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications