பெட்ரோல் விலை: மத்திய ஆட்சியே ஆபத்தில் முடிந்துவிடும்: ஜெயலலிதா எச்சரிக்கை

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பெட்ரோல் விலையை ரூ.1.50-க்கும், டீசலை லிட்டருக்கு 45 காசுகள் என்ற நிலையிலும் உயர்த்தி இரண்டு வாரங்கள் கூட முடிவடையாத சூழலில், மீண்டும் சர்வதேசச் சந்தை விலையையும், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டி மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.40 என்ற அளவுக்கு உயர்த்தியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போதைய பெட்ரோல் விலை உயர்வைச் சுட்டிக்காட்டி, வாகன உரிமையாளர்கள் வாகன கட்டணங்களை உயர்த்தக் கூடும் என்ற நிலை உருவாகும். இதனால் அனைத்துப் பொருள்களின் விலையும் மேலும் பன்மடங்கு உயரக் கூடும். இதனால் மக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கப்படுவார்கள்.
ஏழை மக்களை பாதிக்கும்
பெட்ரோலியப் பொருள்களின் விலையை அடிக்கடி உயர்த்துவது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் செயல். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் விலை நிர்ணயக் கொள்கை நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்க வழிவகுக்குமே தவிர, மேம்படுத்த வழிவகுக்காது. இந்திய ரூபாயின் மதிப்பு என்பது நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் அன்னிய நேரடி முதலீடு, அன்னிய நிறுவனங்கள் முதலீடு ஆகியவற்றின் அடிப்படையிலும், நாட்டின் பொருளாதார நிலைத் தன்மை குறித்த பார்வையின் அடிப்படையிலும் அமையக் கூடியது.
நிர்ணயக் கொள்கையில் மாற்றம்
எனவே, அவ்வப்போது மாறும் ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோலியப் பொருள்களின் விலையை அடிக்கடி மாற்றி அமைப்பது என்பது பொருளாதார நிலைத் தன்மைக்கு ஊறு விளைவிக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு, நான் ஏற்கெனவே பலமுறை கூறியுள்ளபடி, பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையில் உடனடி மாற்றம் கொண்டுவர வேண்டுமென்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இதுபோன்று இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி மக்களைத் துன்புறுத்தினால் மத்தியில் ஆட்சியே ஆபத்தில் முடிந்துவிடும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்க விரும்புகிறேன் இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications