ஜேபிசியில் ஆ. ராசா சாட்சியமளிப்பது 'தவிர்க்க முடியாதது அல்ல' : பி.சி. சாக்கோ
திருச்சூர்: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜேபிசி) முன்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா சாட்சியமாக அழைக்க அவசியம் இல்லை என்று அதன் தலைவர் பி.சி. சாக்கோ கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கியமானவரான ஆ.ராசா தம்மை சாட்சியாக அழைத்து ஜே.பி.சி. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அப்படி அழைக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறேன் என்றும் மிரட்டியிருந்தார்.
இது தொடர்பாக கேரள மாநிலம் திருச்சூரில் செய்தியாளர்களிட பேசிய சாக்கோ, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனைத்து முக்கிய சாட்சிகளும் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. எனவே இந்தச் சூழ்நிலையில், ராசாவை சாட்சியாக அழைப்பது தவிர்க்க முடியாதது அல்ல. சாட்சியமளிக்க விரும்புகிற அனைவரையும் அழைப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாததாகும். இந்த விவகாரத்தில் ஜே.பி.சி.யின் மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வரைவு அறிக்கையைத் தயாரிக்குமாறு ஜே.பி.சி. கேட்டுள்ளது. இந்த அறிக்கையை மே 22-ந் தேதி நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிவதற்குள் சமர்ப்பித்தாக வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications