இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்- ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நாளை தாக்கல்

இலங்கை இறுதிப் போரின் போது தமிழர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை ஏற்கனவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 தொலைக்காட்சி கூடுதலாகவும் ஆவணப்படங்களை வெளியிட்டு வருகிறது. இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சி உலகை உலுக்கி வருகிறது.
இந்த நிலையில், 47 நாடுகளை உறுப்பினர்களாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறது. நாளை இந்த தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்கிறது. தீர்மான விவரம் வெளியாகவில்லை என்ற போதிலும், இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதில் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அறிவித்து உள்ளன.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், சர்வதேச தமிழ் அமைப்புகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு தமது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின் தீர்மானத்தை கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் ஓட்டெடுப்பின்றி ஒரு மனதாக நிறைவேற்ற அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications