'தாதா' அமைச்சர் ராஜா பையா கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட டி.எஸ்.பி. வீட்டில் அகிலேஷ்

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ அருகே பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள பாலிபுரா கிராமத்தின் தலைவரான நானே யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இம்மோதலில் டி.எஸ்.பி. ஜியா உல் ஹக்கை அமைச்சர் ராஜா பையா கும்பல் கடத்திச் சென்றுள்ளது. தங்களது கஸ்டடியில் வைத்து கொடூரமாக சித்தரவதைகளை செய்த பின்னர் சுட்டு வீசியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது டி.எஸ்.பி, படுகொலை. வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில் மாநில அரசைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இக்கொலை தொடர்பாக போலீசில் புகார் அளித்திருக்கும் டி.எஸ்.பி.யின் மனைவி பர்வீன், தமது கணவரை அமைச்சர் ராஜா பையாவும் அவரது அடியாட்களும்தான் சுட்டுப் படுகொலை செய்தனர் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ராஜா பையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரது அடியாட்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புகாருக்குள்ளாகியிருக்கும் ராஜா பையா தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனிடையே ராஜா பையா கும்பலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட டி.எஸ்.பி. ஜியா உல் ஹக் வீட்டுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications