பல் மருத்துவக் கவுன்சிலுக்கு லஞ்சம் .. கோர்ட்டில் ஆஜரான பங்காரு அடிகளாரின் மகன்கள்
சென்னை: மேல்மருவத்தூரில் உள்ள பங்காரு அடிகளாருக்குச் சொந்தமான ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்புக்கு அனுமதி பெறுவற்கு பல் மருத்துவக் கவுன்சிலுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் சிபிஐ கோர்ட்டில் பங்காரு அடிகளாரின் மகன்கள் இருவரும் நேரில் ஆஜரானார்கள்.
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பல்மருத்துவ கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்க அனுமதி பெறுவதற்கு இந்திய பல்மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசனுக்கு லஞ்சம் கொடுத்தாக சி.பி.ஐ. கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகளான பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு, அவரது மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.
இதையடுத்து மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினர். நீதிமன்றம் 3 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் வழங்கி முன்ஜாமீன் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, லஞ்சம் கொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி இவர்கள் இருவரும் சி.பி.ஐ. அதிகாரி முன்பு நாளை விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications