நடத்தையில் சந்தேகம்: மாமல்லபுரத்தில் காதல் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை
காஞ்சீபுரம்: மாமல்லபுரத்தில் காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரையும், 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கோவளம் சாலையை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(34). வெல்டிங் வேலை பார்ப்பவர். அவர் அண்ணாநகரைச் சேர்ந்த சாரங்கன் என்பவரின் மகள் ரமணியை(30) காதலித்து கடந்த 2008ம் ஆண்டு மணந்தார். அவர்களுக்கு மைத்ரேயன் (4) என்ற மகனும், சவுஜன்யா (2) என்ற மகளும் உள்ளனர்.
மாமல்லபுரம் மாதா கோவில் தெருவில் இருக்கும் புனித மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார் ரமணி. அவருடைய மகன் மைத்ரேயன் அதே பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். கடந்த சில மாதங்களாக மணிகண்டன் வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லுமாறு ரமணி கண்டித்துள்ளார்.
இது தவிர ரமணி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு மணிகண்டன் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ரமணி பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தார். மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்த மணிகண்டன் வழக்கம்போல் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் படுக்கை அறையில் வைத்து தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்றார். அதன் பிறகு மகனின் கழுத்தையும் அறுத்துக் கொலை செய்தார்.
பின்னர் மகளின் கழுத்தை கையால் நெறித்துக் கொன்றார். மனைவி, குழந்தைகள் இறந்தவுடன் அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை 6 மணிக்கு ரமணியின் தம்பி கோபி அங்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்புறமாக பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக அவர் எட்டிப் பார்த்தார். அப்போது தனது அக்காவின் குடும்பமே பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications