லோக்சபாவில் நாளைமறுநாள் இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதம்?

இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை கண்டித்தும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்ள வலியுறுத்தி திமுக எம்பிக்கள் இன்று பார்லிமென்ட் வளாகம் முன்பு உள்ள காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், செல்வ கணபதி, ஜெபத்துரை, வசந்தி ஸ்டான்லி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
ராஜ்யசபா போல லோக்சபாவிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக எம்.பிக்களும் வலியுறுத்தி இன்று சபையில் முழக்கங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் லோக்சபாவில் 193-வது பிரிவின் கீழ் விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் மீரா குமார் அனுமதிக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications