'குடிமக்களுக்கோர் நற்செய்தி'...இனிமேல் 100 ரூபாய்க்கு டாஸ்மாக்கில் 'வெள்ளக்காரன்' பீர் அடிக்கலாம்!
சென்னை: நாடு போற்றும் நல்ல நாடாக, டாஸ்மாக் மூலம் சிறந்த போதை மாநிலமாக பாஸ்மார்க் வாங்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் புத்தம் புதிய அறிமுகமாக, நூறு ரூபாய்க்கு பீர் என்ற புதிய திட்டத்தை டாஸ்மாக் கடைகளில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விதம் விதமான சரக்குகள்...டார்கெட் போட்டு வேலை செய்யும் ஊழியர்கள் என டாஸ்மாக் கடைகள் கோலாலமாக கல்லாக் கட்டிக் கொண்டுள்ளன. எத்தனையோ விதமான சரக்குகளை இங்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது புதிய ரக பீர் ஒன்றை குடிகாரர்களின் 'நலன்' கருதி அரசு களம் இறக்கியுள்ளதாம். அதுதான் 100 ரூபாய் பீர்.!

20 வகை பீர்
டாஸ்மாக் கடைகளில் தற்போது 20 வகையான பீர் விற்பனை செய்யப்படுகிறதாம். இவை அனைத்துமே பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகள்தான்.

வெளிநாட்டு பீர் பராக் பராக் பராக்
தற்போது பிற மது வகைகளைப் போல பீரிலும் வெளிநாட்டு அறிமுகத்தை களமம் இறக்குகிறர்கள். வெளிநாட்டு உயர் ரக பீர்களை டாஸ்மாக் அறிமுகம் செய்கிறது.

பார்லியில் செய்த ஐஸ்பெர்க் 9000
ஐஸ்பெர்க் 9000 மகா ஸ்டிராங் பீர் என்ற புதிய வகை பீர் அறிமுகமாகியுள்ளது. இது பார்லியில் செய்ததாகவும். 45 நாள் வரை இதை பாதுகாப்பாக வைத்திருக்கலாமாம். கெடாதாம்.

ரூ. 100தான் விலை
இது வெளிநாட்டு பீர் என்றாலும் கூட 100 ரூபாய்க்கே இதை விற்கிறார்களாம். இதில் ஆல்கஹாலின் அளவானது 8 சதவீதத்திற்கும் சற்று அதிகமாகும்.

நேற்று முதல் குடிக்கிறார்கள்
இந்த பீர் நேற்று முதல் குடிகாரர்கள் வாயில் புழங்க ஆரம்பித்துள்ளது. சில மாவட்டங்களில் இன்று விற்பனைக்கு கொடுக்கிறார்களாம்.

கிங் கோப்ராவும் வருதுங்கோ!
அடுத்து கிங் கோப்ரா ஸ்டிராங் பீர் ஏப்ரல் வெயிலைத் தணிக்கும் வகையில் அறிமுகமாகிறது. அதேபோல கோப்ரா ப்ரீமியம் ரக பீர் மே மாதத்தில் விற்பனைக்கு வருகிறது.
அப்புறம் என்ன 'சம்மரை' சமர்த்தாக கொண்டாடுங்க 'குடிகாரர்'களே...!
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications