சென்னை-பெங்களூர் ஏசி டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் இந்த ஆண்டே ஓடும்: கனி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை-பெங்களூர் இடையேயான ஏசி டபுள் டக்கர் ரயில் சேவை நடப்பாண்டிலேயே துவங்கும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் கோட்லா ஜெயசூர்ய பிரகாஷா ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை-பெங்களூர் இடையேயான ஏசி டபுள் டக்கர் ரயில் சேவை எப்பொழுது துவங்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் கோட்லா ஜெயசூர்ய பிரகாஷா ரெட்டி பதில் அளித்தார்.

Chennai-Bangalore AC Double Decker Express to start functioning this year itself
அப்போது அவர் கூறுகையில்,

சென்னை-பெங்களூர் இடையேயான ஏசி டபுள் டக்கர் ரயில் சேவை 2013ம் ஆண்டிலேயே துவங்கப்படும். அந்த ரயிலில் 1,320 பயணிகள் செல்லலாம். சென்னை-புதுவை மற்றும் கடலூர் இடையேயான கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் இன்னும் பூர்வாங்க நிலையில் தான் உள்ளது.
ரயில் பாதைக்கான அளவீடு மட்டும் தான் முடிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு நிலம் ஒதுக்கிய பிறகே அடுத்தக்கட்டப் பணிகள் துவங்கும்.

கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பூர்வாங்கப் பணிக்களுக்காக ரூ.1.43 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

பெருங்குடி மற்றும் சென்னை புறநகர் ரயில் நிலையங்களை இணைப்பதில் இருக்கும் தொழில்நுட்ப சிக்கல்களை மனதில் வைத்து சென்னை, புதுவை, மாமல்லபுரம் ரயில் பாதைக்கு செங்கல்பட்டில் இருந்து இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+