முதல் முறையாக மாமியார் வீட்டுக்குச் சென்ற பிரணாப் முகர்ஜி!
டெல்லி: வங்கதேசத்துக்குப் பயணம் சென்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, திரும்பும் வழியில் முதல் முறையாக தன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அவரை அந்த கிராம மக்கள் அன்புடன் வரவேற்றனர்.
வங்காள தேசத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று புதுடெல்லி திரும்பினார். பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா, வங்காள தேசத்தில் பிறந்து வளர்ந்தவர்.
இப்பயணத்தின்போது மனைவியின் பெற்றோர்கள் வாழ்ந்த பத்ரபிலா கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டை தனது மனைவியுடன் சென்று பார்வையிட்டார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

அவர்கள் இருவரையும் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கனாய் லால் கோஷ், அவரது குடும்பத்தார் மற்றும் கிராம மக்கள் அன்புடன் வரவேற்றனர்.
வங்காள முறைப்படி, ஒரு வங்காளப் பெண்ணின் கணவரை ஜமாய் என்று அழைப்பார்களாம். அதுவும் ஒரு நாட்டின் குடியரசுத் தலைவரே தங்கள் கிராமத்து ஜமாய் என்பதால், பிரணாபுக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்து ஜமாய்த்துவிட்டார்களாம்.
டெல்லி திரும்பிய பிறகு, மாமியார் வீட்டுக்குப் போய்வந்த அனுபவம் குறித்து செய்தியாளர்கள் பிரணாபிடம் கேட்டனர்.
அதற்கு அவர், "எங்களுக்கு 1957ல் திருமணம் ஆனதில் இருந்து முதன்முறையாக என் மாமியார் வீட்டிற்கு இப்போதுதான் சென்றேன். அந்த கிராம மக்கள் மணமகனை வரவேற்பதுபோல் என்னை வரவேற்றனர். புது மாப்பிள்ளையைப் போன்ற உணர்வுதான் எனக்குத் தோன்றியது. சந்தோஷமாக இருந்தது," என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications