ரூ.818 கோடி நிதி மோசடி: கோவை பைன் பியூச்சர் இயக்குனர்கள் கைது
கோவை: 818 கோடி ரூபாய் மோசடி செய்த பைன் பியூச்சர் நிதி நிறுவன அதிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பைன் பியூச்சர் நிதிநிறுவனம் கோவை பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக இயக்குனர்களாக செயல்பட்டு வந்த விவேக், செந்தில்குமார் ஆகியோர், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவதாகவும், ஆண்டு இறுதியில் முதலீட்டு தொகையை திரும்ப வழங்குவதாகவும் கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டனர்.
இதை உண்மை என நம்பிய முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். கோவை, திருப்பூர், அன்னூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பைன் பியூச்சர் நிறுவனத்தில் 818 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.
பலநூறு கோடி ரூபாய் பணம் சேர்ந்த உடன் நிறுவனத்தை மூடிவிட்டு பைன்பியூச்சர் நிறுவன இயக்குனர்கள் 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து முதலீட்டாளர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவுபோலீசில் புகார் செய்தனர்
கோவை மாட்ட குற்றப்பிரிவில் இருந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து தலைமறைவானவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
பைன் பியூச்சர் இயக்குனர்கள் செந்தில்குமார் , விவேக் ஆகியோர் சென்னையில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் பதுங்கியிருந்த அறையில் சோதனை செய்தபோது ரூ.4 கோடி ரொக்க பணம், 1 1/2 கிலோ தங்கம் ஆகியவை சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான இருவரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு விசாரணை நடைபெறும். இதனையடுத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் பணம் குறித்த தகவல்கள் விரைவில் தெரியவரும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications