கிராமப்புற வேலை உறுதித் திட்ட ஊதியம் ரூ 148 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் (MNREGA) தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ. 148-ஆக உயர்த்தப்படுகிறது.

மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையினை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்துவிட்டார். எனவே அதுபற்றி விளக்கமாகக் கேட்க, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஜெய்ராம் ரமேஷைச் சந்தித்தனர்.

'தமிழ்நாட்டில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு உயர்த்தப்படும் என்பது குறித்து விளக்க வேண்டும்' என்று அவர்கள் கேட்டனர்.

அதையடுத்து, "பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மேற்கண்ட திட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுவரும் ரூ. 132 தினசரி ஊதியம் ரூ. 148 ஆக அதிகரிக்கப்படும்' என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "தமிழ்நாட்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பலன் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ. 132 தினசரி ஊதியம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ. 148-ஆக உயர்த்தப்படும். இதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த மாநிலம் தமிழ்நாடு

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 'தானே' புயலால் வீடுகளை இழந்து வாழும் ஏழைகளுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

கிராமப்புறங்களை மேம்படுத்துவதிலும் கட்டமைப்பை உருவாக்குவதிலும் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

தற்போது கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்கப்பட வேண்டும். ஆனால், சராசரியாக ஆண்டுக்கு 45 முதல் 50 நாள்கள் வரை மட்டும்தான் வேலை வழங்க முடிகிறது. இந்த வேலை நாள்களை அதிகரிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.

அதைப் பரிசீலித்த மத்திய அரசு, வறட்சி பாதித்த மாவட்டமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில், வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி வேலை வழங்கும் நாள்களை 150 நாள்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதற்கான கூடுதல் செலவை மத்திய அரசே ஏற்கும்," என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

காஞ்சிபுரம் ஆட்சியர் மீது புகார்

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுடன் பேசும்போது, காஞ்சிபுரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு திட்டங்களைக் கண்காணிக்கும் குழுவின் கூட்டத்தை அந்த மாவட்ட ஆட்சியர் கூட்டுவதில்லை என்று அந்த தொகுதி மக்களவை உறுப்பினர் பி. விஸ்வநாதன் புகார் கூறினார்.

அதற்கு பதில் அளித்த ஜெய்ராம் ரமேஷ், "மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சிவகங்கை தொகுதியிலும் இதே நிலைதான் உள்ளது. இதுபோன்ற மாவட்டங்களில், அரசுத் திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதி நிறுத்தப்பட்டால் அவர்களே உங்களை வந்து பார்ப்பார்கள்.

பணியில் அலட்சியம் காட்டும் மாவட்ட ஆட்சியர்கள் குறித்து, மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறையின் செயலர் மூலம் தமிழக தலைமைச் செயலரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கிறேன்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+