தண்ணீர் பஞ்சம்: தினமும் ரூ.1 லட்சத்திற்கு தண்ணீர் வாங்கும் சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம்
சீரடி: சீரடி சாய்பாபா கோவிலில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் கோவில் நிர்வாகம் தினமும் ரூ.1 லட்சத்திற்கு தண்ணீர் வாங்குகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உலகப் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நீர்த் தேக்க தொட்டிகள் கிட்டத்தட்ட காய்ந்துவிட்டன. பருவமழை பொய்த்ததால் இந்த தொட்டிகளுக்கு நாசிக் தர்ணா அணையில் இருந்து தண்ணீர் சரிவர வருவதில்லை. இதனால் கோவிலில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் தினமும் ரூ.1 லட்சம் கொடுத்து தண்ணீர் வாங்கி வருகிறது. தற்போது தினமும் 50,000 பேர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை கோடை விடுமுறையின் போது 3 லட்சமாக அதிகரிக்கும். கோவிலுக்கு தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
நீர்த் தேக்க தொட்டிகள் 332 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேகரிக்கக்கூடிய அளவு பெரியதாகும். அதில் இருந்து தண்ணீர் நீராவியாவதை தடுக்க தொட்டிகளை பிளாஸ்டிக் ஷீட்கள் போட்டு மூட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணிகள் முடிய குறைந்தது ஒரு மாத காலம் ஆகும். இதற்கிடையே கோவிலுக்கு தினமும் நாசிக் தர்ணா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோவில் நிர்வாகம் மகாராஷ்டிரா மாநில பாசனத்துறையை கேட்டுக் கொண்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications