புற்றுநோய் நிபுணர் டாக்டர் வி.சாந்தாவுக்கு தமிழக அரசின் அவ்வையார் விருது
சென்னை: 2013-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு, புற்று நோய் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை அடையாறில் உள்ள புற்று நோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது எனும் உயரிய விருது வழங்க முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் சால்வை ஆகியவை வழங்கப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
2013-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு, புற்று நோய் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை அடையாறில் உள்ள புற்று நோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த விருதினை டாக்டர் வி.சாந்தாவுக்கு முதல்வர் ஜெயலலிதா சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி தலைமைச் செயலகத்தில் வழங்கி கவுரவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications