இலங்கை விவகாரத்தில் தலையிட மாட்டோம்- மனதில் இருப்பதை தெளிவாகச் சொன்னது காங்.
பெங்களூர்: இலங்கையின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிடாது என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக கூறி விட்டது. இதன் மூலம் இலங்கையில் என்ன நடந்திருந்தாலும், இனிமேல் என்ன நடந்தாலும் அதை இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் கண்டு கொள்ளாது என்பதை அது மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.
பெங்களூர் வந்த கட்சியின் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் சிங்வி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்திய அரசு இந்த பிரச்சினையை நடுநிலையோடு சீர்தூக்கி பார்க்கிறது. இந்தியாவின் நிலை தெளிவானது. நாங்கள் எந்த ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிடமாட்டோம். அதுவும் அண்டை நாடு இந்தியாவின் மதிப்பு மிக்க நட்பு நாடான இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடமாட்டோம்.
அதே நேரத்தில் மனித உரிமை மீறல் என்பதை இருவேறு கருத்துக்கு இடமின்றி வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒரு சமநிலையான அணுகுமுறை என்றே கருதுகிறேன்.
பிரதமர் பதவி குறித்து நரேந்திர மோடியின் அதிக எதிர்பார்ப்பே வேதனைக்குரியதாக இருக்கிறது. காரணம் அவரது கட்சியிலேயே அதற்கு எதிர்ப்பு உள்ளது. அதோடு தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அவருக்கு ஆதரவு இல்லை.
ராகுல் காந்திதான் மகாத்மா காந்தி
ராகுல் காந்தியின் கொள்கை மகாத்மா காந்தியினுடையது. அதாவது எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்றுவது தான் ராகுல் காந்தியின் கொள்கை. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ராகுல் காந்தி பணியாற்றுகிறார் என்றார் சிங்வி.












Click it and Unblock the Notifications