கை கொடுத்த கள்ளக் காதல் விவகாரம்! கேரள அமைச்சர் கணேஷ்குமார் தந்தையிடம் சரண்!!

கேரள மாநில காங்கிரஸ் பியின் தலைவராக இருப்பவர் பாலகிருஷ்ணபிள்ளை. இடமலையார் நீர்மின் திட்ட ஊழல் காரணமாக இவர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. தமக்குப் பதிலாக மகன் கணேஷ்குமாரை எம்.எல்.ஏவாக்கி அமைச்சராக்கியும் விட்டார். ஆனால் அமைச்சராகிவிட்ட மகனோ தந்தையுடன் மோதத் தொடங்கினார். இதனால் மகனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணபிள்ளை போர்க்கொடி தூக்கியிருந்தார்.
இந்நிலையில் கேரள ஊடகங்களில் அமைச்சர் ஒருவரை கள்ளக் காதலியின் கணவர் அடித்து தாக்கியதாக தகவல்கள் வெளியானது. அமைச்சர் யார் என்று தெரியாத நிலையில் கொறாடா ஜார்ஜ், அமைச்சர் கணேஷ்குமார்தான் அடிவாங்கியவர் என்று போட்டுக் கொடுத்தார். இதை கணேஷ்குமார் மறுத்தார். மேலும் ஜார்ஜூம் தமது தந்தை பாலகிருஷ்ணபிள்ளையும் நண்பர் என்பதால் பெயரைக் கெடுக்கின்றனர் எனக் கூறி இருந்தார்.
விவாகரத்து கோரும் மனைவி:
இந்நிலையில் கணேஷ்குமாரின் மனைவி, எனது கணவருக்கு கள்ளக் காதலி இருப்பது உண்மை என்றும் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது தாமே எஸ்.எம்.எஸ். அனுப்பி கள்ளக்காதலை சொன்னதாகவும் கூறியிருக்கிறார். மேலும் கணேஷ்குமாரிடமிருந்து தாம் விவகாரத்து கோரப்போவதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இதனால் மிகவும் இக்கட்டான நிலைமையில் சிக்கிக் கொண்ட கணேஷ்குமார் பேசாமல் தந்தை பாலகிருஷ்ண பிள்ளையிடம் சரணடைவது என முடிவு செய்தார். இதற்காக அமைச்சர் சிபு பேபி ஜான் ‘தரகராக' இருந்து செயல்பட்டார். அவர் பாலகிருஷ்ண பிள்ளையிடம் சுமார் 45 நிமிட சமரசம் பேசினார். பின்னர் கணேஷ்குமரை சந்திக்க அவர் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அப்பாவும் மகனும் சுமார் 20 நிமிடம் விவாதித்திருக்கின்றனர். இதனால் தந்தை- மகன் மோதல் முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து கேரள முதல்வர் உம்மண் சாண்டியும், இது கணேஷ்குமாரின் குடும்ப விவகாரம்.. இதற்காக அவர் ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை என்று கூறி பிரச்சனைக்கு தற்காலிகமாக பிரச்சனைக்கு முடிவு கட்டி இருக்கிறார்...
அரசியல்னா சும்மாவா?












Click it and Unblock the Notifications