ராஜஸ்தானில் 4 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற மாந்திரீகருக்கு தூக்கு
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 4 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்று அவரது உடலை தன் வீட்டிலேயே புதைத்த மாந்திரீகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம் கணேஷ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் காலு கான்(48). மாந்திரீகர். அவர் கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை உணவு வாங்கித் தருகிறேன் என்று கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் சிறுமியை கற்பழித்துக் கொலை செய்து உடலை தனது வீட்டிலேயே புதைத்துவிட்டார்.
இதற்கிடையே சிறுமியைக் காணாமல் அவரது குடும்பத்தார் தேட ஆரம்பித்தனர். அப்போது சில கிராமத்தினர் காலு மீது சந்தேகப்பட்டு அவரது வீட்டுக்கு சென்று தரையத் தோண்டியபோது சிறுமியின் சடலம் கிடைத்தது.
இதையடுத்து லால்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் காலு கானுக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications