இந்தியாவை அச்சுறுத்தி மிரட்டப் பார்க்கிறது இலங்கை - ஜெ. புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச்சூடும், இந்தியாவை அச்சுறுத்தி பணிய வைக்கும் இலங்கையின் ஒரு மறைமுக முயற்சி என்ற அளவிலும், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து அக்கிரமங்கள் செய்த இலங்கைக்கு எதிராக சர்வதேச சமுதாயத்தில் இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடாது என்று இந்தியாவை மிரட்டவும் ஒரு மறைமுக முயற்சி என்ற ரீதியிலும் இந்த சம்பவத்தை பார்க்கலாம். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு துயர சம்பவத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள், புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் என மொத்தம் 14 இந்திய மீனவர்கள் 2 இயந்திர படகுகளில் கடந்த 2-ந்தேதி இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் தமிழ்நாட்டின் கோடியக்கரையின் தென்கிழக்குப் பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது பார்க்கும்படியான தூரத்தில் இருந்த இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களின் படகுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், புதுச்சேரி மீனவர் செண்பகம் படுகாயம் அடைந்தார். அவரை உடன் சென்ற மீனவர்கள் தங்கள் படகில் வைத்து கரைக்கு கொண்டுவந்து நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

இலங்கை கடற்படையினர் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது நடத்தும் அக்கிரமங்களை மீண்டும் நிகழ்த்த தொடங்கிவிட்டார்கள் என்பதை மிகுந்த கவலையோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏற்கனவே தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தூத்துக்குடியைச்சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றிருப்பதும், தற்போது அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருப்பதும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

இப்போது, இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம், தங்கள் வயிற்றுப்பாட்டிற்காக கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மத்தியில் இலங்கை கடற்படையினர் ஒருவித பயத்தையும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்த விரும்புவதை, இது தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

மேலும், இலங்கை தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திய அக்கிரமங்களுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக இந்திய பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலைக்கு எதிரான ஒன்றாகவும் இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடந்துகொண்ட இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில் இருந்தும் இந்த சம்பவத்தை அணுக வேண்டியுள்ளது.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச்சூடும், இந்தியாவை அச்சுறுத்தி பணிய வைக்கும் இலங்கையின் ஒரு மறைமுக முயற்சி என்ற அளவிலும், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து அக்கிரமங்கள் செய்த இலங்கைக்கு எதிராக சர்வதேச சமுதாயத்தில் இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடாது என்று இந்தியாவை மிரட்டவும் ஒரு மறைமுக முயற்சி என்ற ரீதியிலும் இந்த சம்பவத்தை பார்க்கலாம். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

இந்த விஷயத்தில் இந்திய அரசு அமைதியாக வெறும் பார்வையாளராக இருக்கக்கூடாது. கடலில் காலகாலமாக மீன்பிடித்துக்கொண்டிருக்கும் அப்பாவி இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளுமாறு இலங்கை அரசை அறிவுறுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+