தந்தைக்கு ஜீவனாம்சம் தராத 6 பிள்ளைகள்... வீட்டு சாமான்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு
வேலூர்: தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்காத 6 மகன்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த வேலூர் மாவட்டம் வாலாஜா கோர்ட், அவர்களது வீடுகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய அதிரடி உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம் திருப்பாற்கடல் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் வி.ராமகிருஷ்ணன். இவரது 6 மகன்களான அசோகன், கிருஷ்ணமூர்த்தி, ரங்கநாதன், தயாளன், வேல்முருகன், வரதராஜன் ஆகியோர் இப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், இவர்களுக்கு ராமகிருஷ்ணன் தனது சொத்துகளை பாகப் பிரிவினை செய்துகொடுத்துள்ளார்.
சொத்து கைக்கு வரும் வரை தந்தையை பத்திரமாக காத்து வந்த 6 பிள்ளைகளும், சொத்துக்கள் கைக்கு வந்ததும், தந்தையை நட்டாற்றி விட்டு விட்டனர். சரியாக சாப்பாடு கூட போடுவதில்லையாம். இதைத் தொடர்ந்து, மகன்களிடம் ஜீவனாம்சம் கோரி வாலாஜா குற்றவியல் நீதிமன்றம் 1-ல் ராமகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், மாதம்தோறும் 6 மகன்களும் தலா ரூ.1,000 வழங்க வேண்டும் என 2012ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி உத்தரவிட்டார் ஆனால் அவர்கள் சொன்னபடி வழங்கவில்லை. இதையடுத்து ராமகிருஷ்ணன் அப்பீல் செய்தார்.
இதை விசாரித்த மாஜிஸ்திரேட் காயத்ரி, 6 பேரின் வீடுகளில் உள்ள மின்விசிறி, கட்டில், பீரோ, பித்தளை சாமான்கள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்து மார்ச் 22ஆம் தேதிக்குள் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைக்க வேண்டும் என காவேரிப்பாக்கம் போலீஸாருக்கு அதிரடி உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications